திருமானூர் மக்களைப் பதறவைத்த சிலிண்டர் விபத்து!

அரியலூர் மாவட்டம் சாந்தமங்கலம் கிராமத்தில் தங்கதுரை என்பவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில்,அவரது வீடு கடுமையாக சேதமடைந்தது.

               
தங்கதுரையின் மனைவி மாரியம்மாள் நேற்று மாலை சிலிண்டர் அடுப்பை பற்றவைத்தபோது, டியூப்பில் கசிவு ஏற்பட்டு எரியத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து மாரியம்மாள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். சிறிது நேரத்தில், பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்துள்ளது. இதில், மாரியம்மாளின் ஓட்டு வீடு முற்றிலும் பாதிக்கப்பட்டு, சேதமடைந்தது. மேலும், வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து நாசமாயின. இதனையடுத்து, மளமளவென பரவிய தீ, தங்கதுரையின் உறவினர்கள் வீடான செல்வராஜ், வேதவள்ளி ஆகியோரின் ஓட்டு வீடுகளும் எரிந்து சாம்பலாயின. இதில், அவர்களின் வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து நாசமாயின.

                 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, அரசுத் தலைமைக் கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து, அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் பணம், 10 கிலோ அரிசியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!