வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (23/12/2017)

கடைசி தொடர்பு:17:30 (23/12/2017)

காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக பட்டாசு தொழிலாளர்கள் அறிவிப்பு!

பட்டாசுக்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். 

வேலை நிறுத்தம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அகில இந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு  சார்பில் நடந்த கூட்டத்தில், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதென முடிவெடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு  நிர்வாகிகள், ‘வரும் 26ஆம் தேதி முதல் பட்டாசு சார்ந்த தொழில்கள் அனைத்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், பட்டாசினால் சுற்றுப்புற மாசு ஏற்படுவது பற்றி உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை விரைந்து முடிக்கவும் அவர்கள் வலியுறுத்தியும் உள்ளனர். சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டுச் சட்டம் (1986 - கீழ் விதி என் 3 (3B ) ல் திருத்தம் செய்து, சுற்றுக்சூழல் மாசு கட்டுப்பாட்டிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், வெளிநாடுகளைப்போல நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடையில்லா நிலையை ஏற்டுத்தித் தர வேண்டும். இத்தொழிலில் நேரிடையாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக ரசாயனம் சார்ந்த தொழில்களும், அச்சு, பேப்பர் அட்டை, போர்டு, பிரின்ட் மற்றும் அச்சு சார்ந்த தொழில்கள் மற்றும் சரக்கு வாகன தொழிலாளர்கள் என 5 லட்சம் தொழிலாளர்கள் பட்டாசுத் தொழிலை சார்ந்துள்ளனர். பட்டாசு தொழிலில் ஏற்படும் பாதிப்பு, அந்தத் தொழிலாளர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பை உண்டாகும். இதேநிலை நீடித்தால் சிவகாசி வறண்ட பூமியாக மாறிவிடும்’ என்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க