வாசிப்பின் பெருமையை உணர்த்தும் “செங்கை புத்தகத் திருவிழா”!

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் இணைந்து ‘செங்கை புத்தகத் திருவிழா’ என்னும் புத்தக காட்சியை நடத்திருவருகிறது. செங்கல்பட்டு சார்ஆட்சியர் ஜெயசீலன் புத்தக காட்சியை துவக்கி வைத்தார். 23ம் தேதியிலிருந்து ஜனவரி 13ம் தேதிவரை தினமும் மாலை 6 மணிக்கு புத்தக திருவிழா தொடங்குகிறது. திரைப்பட இயக்குநர்கள் கௌதமன், தங்கர் பச்சான், பாரதி கிருஷ்ணகுமார், எழுத்தாளர் ராமகிருஷ்ணன், பட்டிமன்ற நடுவர் நெல்லை கண்ணன், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி  அரிபரந்தாமன் என தினம் ஒருவர், இந்த கண்காட்சியில் சிறப்புரையாற்ற இருக்கிறார்கள்.

செங்கை புத்தக திருவிழா

துவக்கவிழாவில் பேசிய பேராசிரியர் கிள்ளிவளவன், `வீரம், பக்தி, காதல் என மனதோடு சம்மந்தப்பட்ட உணர்வுகள்தான் மனிதனை எப்போதும் முன்னிருத்தும். ஆனால் எல்லாவற்றிற்கும் பணம்தான் மனிதனை இன்று முன்னிருத்துகிறது. சமூகத்தில் நுகர்பொருள் கலாசாரம் பெருகிவிட்டதால், உயர்வு, தாழ்வு, வாழ்நாள் சாதனை என்பதெல்லாம் எவ்வளவு சாம்பாதித்தோம், எவ்வளவு பொருள்கள்  வைத்துள்ளோம் என புறப் பொருள்களை வைத்து அளவிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். மனிதனை மனிதனாக அளவிடும் காலம் வரவேண்டுமென்றால் பகுத்தறிவு கொண்ட பல புத்தகத் திருவிழாக்கள் நடைபெறவேண்டும். இல்லையென்றால் மனித நேயம், மானுடம் வீழ்ந்துவிடும். புத்தகம் என்றாலே புதிய அகம் என்று பொருள்' என வாசிப்பின் சிறப்புகளைப் பற்றி பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!