வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (24/12/2017)

கடைசி தொடர்பு:12:28 (24/12/2017)

’எடப்பாடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்!’ - தினகரன் உறுதி

'எடப்பாடி ஆட்சி மூன்று மாதத்தில் வீட்டுக்கு அனுப்பப்படும்' என்று மதுரையில் தினகரன் உற்சாகமாக  பேட்டியளித்தார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எடப்பாடி ஆட்சி

கடந்த இரண்டு நாள்களாக நெல்லை, குமரி மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை செல்வதற்காக சற்று முன் மதுரை விமான நிலையம் வந்த டிடிவி.தினகரன், அங்கிருந்த செய்தியாளர்களிடம் உற்சாகமாக பேசினார், "ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மாபெரும் வெற்றி தந்துள்ளனர். ஆர்கே நகர் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், ஏழரைக் கோடி தமிழ் மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளனர் அதிமுக தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். தமிழக மக்களின் எண்ணத்தை இத்தேர்தல் பிரதிபலித்துள்ளது. இன்னும் மூன்று மாதத்தில் எடப்பாடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்" என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க