ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாதான் வெற்றி பெற்றுள்ளார்..! இல.கணேசன் | Jayalalitha won the RK Nagar by-poll, says Ila.Ganesan

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (24/12/2017)

கடைசி தொடர்பு:17:15 (24/12/2017)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாதான் வெற்றி பெற்றுள்ளார்..! இல.கணேசன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாதான் வெற்றி பெற்றுள்ளார் என்று பா.ஜ.க மூத்தத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் 15-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், சுயேட்சை வேட்பாளராக களம் கண்ட டி.டி.வி.தினகரன் 70 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலையில் உள்ளார். தினகரனின் வெற்றி, பெரும்பாலும் உறுதியாகியுள்ளது. இதில், பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன், நோட்டாவையும் விட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மூத்தத் தலைவர் இல.கணேசன், 'மக்களின் முடிவை பா.ஜ.க ஏற்றுக்கொள்கிறது. ஆர்.கே.நகர் மக்கள், மற்றக் கட்சிகளைக் கணக்கில் கொள்ளவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தி.மு.கவின் கை ஓங்கும் என்ற நம்பிக்கை பொய்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், ஜெயலலிதா மீது பெரும் மரியாதை வைத்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தலின் வெற்றி, ஜெயலலிதாவுக்கு கிடைத்தவெற்றி. ஜெயலலிதா பெயரைச் சொல்லி வாக்குக் கேட்டவர்களுக்கு ஒரு லட்சத்துக்கு அதிகமாக வாக்குகள் கிடைத்துள்ளது. அ.தி.மு.க சேர்ந்து இருக்க முயற்சி செய்யவேண்டும். அ.தி.மு.க தங்களை மறு பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். தேர்தல் முடிவு குறித்து பா.ஜ.க ஆய்வு செய்யவேண்டும். இந்தத் தேர்தலில் ஆர்.கே.நகர் மக்கள் பா.ஜ.கவை கணக்கில் கொள்ளவில்லை. உள்ளாட்சித் தேர்தலின்போது, மக்களின் மனநிலை மாறும்' என்று தெரிவித்தார்.