வெளியிடப்பட்ட நேரம்: 02:32 (25/12/2017)

கடைசி தொடர்பு:10:09 (25/12/2017)

கலகலப்பு-2 டீசர் ரிலீஸ்!

யக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விமல், 'மிர்ச்சி' சிவா , அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் கலகலப்பு. 2012 ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் சுந்தர்.சி. அவ்னி பிக்சர்ஸ் சார்பில் அவரது மனைவியும், நடிகையுமான குஷ்பு இப்படத்தை தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

கலகலப்பு

இந்தப் படத்திலும் முதல் பாகத்தைப் போன்றே நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஆரவ் மற்றும் ஓவியா ஆகிய இருவரும் இந்தப் படத்தில்  நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியான நிலையில், சில மாதங்களுக்கு முன் படக்குழுவினர் படத்தின் நடிகர்-நடிகைகள் பட்டியலை வெளியிட்டனர். 

நடிகர்கள் ஜீவா, ஜெய், 'மிர்ச்சி' சிவா, நடிகைகள் கேத்ரீன் தெரசா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கலகலப்பு முதல் பாகத்தைப்  போன்றே இரண்டாம் பாகத்திலும் நகைச்சுவைக்குப் பஞ்சமிருக்காது எனப் படக்குழுவினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். கடைசியாக சில பேய் படங்களை எடுத்த சுந்தர்.சி தற்போது மீண்டும் தன் காமெடி டிரண்டை பிடித்துள்ளார்.