டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்த விஷால்!

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரனுக்கு, நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

விஷால் ஆர்.கே.நகரில் வேட்புமனு செய்தபோது

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவரால் தேர்தலில் போட்டியிடமுடியவில்லை. இந்நிலையில் சுயேச்சை வேட்பாளாராக போட்டியிட்டு வென்ற டி.டி.வி. தினகரனுக்கு அறிக்கை மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

விஷால்

அதில் கூறியிருப்பதாவது:-

அபார வெற்றி பெற்றிருக்கும் தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்.கே. நகர் தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மீனவர்களின் பிரச்னைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர். தினகரன் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்.கே. நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன். இந்த மக்கள் பணிகளை நிறைவேற்ற தினகரனுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற தினகரன் ஆர்.கே. நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும்  தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!