``ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தினகரன்”: புகழேந்தி

``ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்பதைத் தினகரன் நிரூபித்துவிட்டார்” எனத் தினகரனைப் புகழேந்தி புகழ்ந்துள்ளார்.

புகழேந்தி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி, ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது. "வெற்றித் தகவல்கள் வந்து கொண்டிருந்த நேரத்திலேயே நான்கு அமைச்சர்கள் தினகரன் தரப்பைத் தொடர்புகொண்டு பேசிவிட்டனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். 

இந்நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், “தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றுள்ளார். இதனால், ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு எனத் தினகரன் நிரூபித்துவிட்டார். அவருக்கு அ.தி.மு.க. எம்.பி செங்குட்டுவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். மற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அவருக்கு ரகசியமாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விரைவில் அ.தி.மு.க-வின் மற்ற எம்.பி-களும் தினகரன் அணிக்கு வந்து சேர்வார்கள். விரைவில் சசிகலா ஒப்புதலோடு தினகரன் தமிழகத்தின் முதல்வர் ஆவார்” எனக் கூறினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!