`பொங்கலுக்குள்ளாவது கரும்பு பாக்கிப் பணத்தைக் கொடுங்கள்!' - கரும்பு விவசாய சங்கம் கோரிக்கை | Give sugarcane money at least for Pongal, Sugarcane farmers Union

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/12/2017)

கடைசி தொடர்பு:07:36 (26/12/2017)

`பொங்கலுக்குள்ளாவது கரும்பு பாக்கிப் பணத்தைக் கொடுங்கள்!' - கரும்பு விவசாய சங்கம் கோரிக்கை

கரும்பு விவசாயிகளின் ரூ.50 கோடி பாக்கித் தொகையை  வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையில் ஆட்சியர் லதாவிடம் மனு அளித்தனர்.

சிவகங்கை மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு கடந்த நான்கு ஆண்டுகால பாக்கி ரூ.50 கோடியை பொங்கலுக்கு முன்னதாக வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்கத்தின்  மாநிலபொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் மாவட்ட ஆட்சியர் லாதாவிடம் மனு அளித்தார்.  

அப்போதுபேசிய அவர், `சிவகங்கை மாவட்டத்தில் சக்தி சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு கரும்பு விவசாயிகளுக்கு 2013-14 முதல் 2016-17 வரை அரசு அறிவித்த பரிந்துரை விலையை நிர்வாகம் தரவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.50 கோடி கரும்பு பணபாக்கி உள்ளது. 2016-17க்கு 7.5 கோடி ரூபாய் மத்திய அரசு அறிவித்த விலையில் பாக்கி உள்ளது. அனைத்து பாக்கிகளும் பொங்கலுக்கு முன்னதாக வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்துள்ளோம்.

கரும்பு விவசாயிகளுக்கு லாபப் பங்கிட்டுத் தொகை 2004 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்துக்குத் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று கூட்டுறவு, பொதுத்துறை கரும்பு ஆலைகளில் தொகையைப் பெற்றுவிட்டோம். தனியார் ஆலைகளில் தர வலியுறுத்தியிருக்கிறோம். லாபப் பங்கிட்டுத்தொகையை தராமல் இருப்பதற்கு 2010-ல் புதிய ஷரத்து கொண்டு வந்ததை அரசு நிறுத்திவிட்டது. கரும்பு  விவசாயிகள் சங்கம் நீதிமன்றம் சென்று ஓர் உத்தரவைப் பெற்றுள்ளோம். அதாவது 2004 முதல் 2009 வரை லாபப் பங்கீட்டுத் தொகை தர உத்தரவு பெற்றுள்ளோம். இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கூட்டுறவு, பொதுத்துறை கரும்பு ஆலைகளில் லாபப் பங்கீட்டுத் தொகை ரூ.72 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனியார் ஆலைகள் ரூ.300 கோடி தர வேண்டியுள்ளது. சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் லாபப்  பங்கிட்டுத் தொகையை நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக வழங்க வேண்டும். சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளிடம் பிடித்தம் செய்த கடன் தொகையை வங்கிகளில், கூட்டுறவு வங்கிகளில் செலுத்தாததால் விவசாயிகளுக்கு நகைகள் ஏலம்போகும் அபாயம் உள்ளது. பயிர்க்கடன் தரமறுக்கிறார்கள். விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையை வங்கியில், கூட்டுறவு வங்கியில் உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close