வெளியிடப்பட்ட நேரம்: 02:20 (26/12/2017)

கடைசி தொடர்பு:07:30 (26/12/2017)

`மாரி- 2' படத்தில் யுவன்சங்கர் ராஜா!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் 'மாரி'. காஜல் அகர்வால், 'ரோபோ' சங்கர் உள்ளிட்ட பலர் நடிந்திருந்த இத்திரைப்படம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மாரி படத்தில் தனுஷின் காஸ்டியூம் மற்றும் கெட்டப் பிரபலமாக பேசப்பட்டது. இந்தப் படத்தில் அனிருத்தின் இசை ரசிகர்கள் பலராலும் கொண்டாடப்பட்டது. 

 

மாரி-2

இந்தப் படம் வெளியான போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்திருந்தார். சில நாள்களுக்கு முன்பு மாரி-2வில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார் பாலாஜி மோகன். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தனுஷின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுடன் பத்து வருடங்களுக்குப் பிறகு கூட்டணி சேர்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.