’ரஜினி வீட்டில் இப்போது சுக்ரன் உட்கார்ந்து இருக்கிறார்!’- கலைஞானம் பளீச்

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் தன் அரசியல் நுழைவு அறிவிப்பை வெளியிடும் வகையில் மாவட்ட வாரியாக ரசிகர்களை இன்று முதல் சந்திக்கிறார் ரஜினிகாந்த்.

சென்னை  ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு இன்று காலை தொடங்கியது.

அதிர்ஷ்டம் வரும்போது

காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி  மாவட்ட ரசிகர்களை ரஜினிகாந்த் இன்று சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்கிறார்.

'உடனே தலைவர் அரசியல் கட்சியை அறிவிக்க வேண்டும்' என்று பல கருத்துகளை மனுவாக எழுதிக்கொண்டு வந்துள்ளனர் ரசிகர்கள். இன்றைய நிகழ்ச்சியில் ரஜினியை பைரவி படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். "ரஜினி வீட்டில் இப்போது சுக்ரன் உட்கார்ந்து இருக்கிறார், அருணாச்சலம் படத்தில் என்னையும் ஒரு தயாரிப்பாளராக்கியவர். அவ்வளவு நல்ல மனிதர். ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அதிர்ஷ்டம் வரும்போது யாரும் குறுக்கே நிற்க முடியாது" என்று வாழ்த்திப் பேசினார் கலைஞானம்.

இயக்குநர் மகேந்திரன் பேசும்போது, " யாருக்கும் துன்பம் தரும்படி ரஜினி நடந்துகொள்ள மாட்டார். எதிலும் நிதானமாக இருப்பவர்களால்தான் வெற்றி பெற்று சாதனை படைக்க முடியும். அந்த நிதானம் ரஜினியிடம் அதிகமுண்டு" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!