தற்கொலைக்குத் தள்ளிய வாட்ஸ்அப்! - கணவர் கண்டிப்பால் நடந்த விபரீதம்

ராமநாதபுரம் அருகே அடிக்கடி வாட்ஸ்அப் பார்த்து வந்த மனைவியை அவரின் கணவர் கண்டித்ததால் எலிமருந்து தின்று தற்கொலைக்கு முயன்ற மனைவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

whats app

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள தெற்குனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்டின் தங்கதுரை (42). இவருடைய மனைவி அருள் ஜோதி (38). அருள்ஜோதி செல்போனில் தொடர்ச்சியாக வாட்ஸ் அப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதைக் கண்ட அவர் கணவர் ஜஸ்டின் தங்கதுரை வாட்ஸ் அப் பார்ப்பதை நிறுத்துமாறு தன் மனைவியிடம் கூறியுள்ளார். ஆனாலும், அருள்ஜோதி தனது பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

 இந்நிலையில் கடந்த 23-ம் தேதி அருள் ஜோதி வழக்கம்போல் செல்போனில் வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். இதை ஜஸ்டின்  கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்து அருள்ஜோதி அன்றைய தினம் வீட்டில் இருந்த எலி மருந்தான பேஸ்டைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அருள் ஜோதியின் குடும்பத்தினர் அவரை  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அருள் ஜோதி அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஜஸ்டின் தங்கதுரை கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விவேகானந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!