வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (26/12/2017)

கடைசி தொடர்பு:12:55 (26/12/2017)

ரஜினி என்ன செய்யப்போகிறார்? ரஜினி என்ன செய்ய வேண்டும்? #VikatanSurvey

ரஜினிகாந்த்

ன் ரசிகர்களை சந்திப்பதற்காக அடுத்த சந்திப்பை இன்று தொடங்கியிருக்கும் ரஜினிகாந்த், ஊடகங்களை வைத்துக்கொண்டு அரசியல் பற்றிய தன் கருத்தை மீண்டும் பேசியிருக்கிறார். 1995ல் பாட்ஷா பட வெளியீட்டு விழாவில் அரசியல் பற்றிப் பேசத்துவங்கிய ரஜினிகாந்த், 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் தன் அரசியல் கருத்துகளால் அரசியல் உலகின் கவனத்தை தன்பால் திருப்பியிருக்கிறார். இந்த செய்தி தலைப்புச் செய்தியாகியதன் மூலம் ரஜினிக்கு இன்னுமொரு வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

"அரசியலுக்கு நான் புதிதல்ல. 1996-ம் ஆண்டு முதல் அரசியலில் உள்ளேன். யுத்தத்துக்கு வந்தால் ஜெயிக்க வேண்டும். வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது. வியூகமும் வேண்டும். அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம். ஏன் நான் இத்தனை இழுக்கிறேன் என கேட்கிறார்கள். வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவேன். அரசியலுக்கு வருவேன் என சொல்லவில்லை. அரசியல் முடிவை அறிவிப்பேன் என்றுதான் சொல்கிறேன்," என பேசி மீண்டும் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

இந்த சூழலில் ரஜினிகாந்த் வரும் 31-ம் தேதி அறிவிக்கும் அறிவிப்பு என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?. உண்மையில் ரஜினிகாந்த் என்ன செய்யவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்.

 

loading...