கிராம நிர்வாக அலுவலர்கள், மடிக்கணினியைத் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்தினர்!

மின்னணுச் சான்றிதழ் வழங்க கிராம நிர்வாக அதிகாரிகள் பயன்படுத்தி வரும் மடிக்கணினிகளுக்கு ஓராண்டாகப் பராமரிப்புத் தொகை வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து மடிக்கணினிகளைத் திரும்ப ஒப்படைத்தனர்.

 

மடிக்கணிணி திரும்ப ஒப்படைக்கும் போராட்டம்

தமிழகத்தில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், நில அடங்கல் சான்று உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கென சான்றிதழ் வழங்கும் அலுவலர்களான கிராம நிர்வாக அலுவலர்களுக்குக் கணிப்பொறிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கணிப்பொறிகளைப் பராமரிக்க என மாதம் ரூ.250 அரசால் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக இந்தப் பராமரிப்புத் தொகை அரசால் வழங்கப்படவில்லை. பராமரிப்பு தொகையினை வழங்கக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை தாலுகா அலுலகத்தின் கீழ் உள்ள பல்வேறு குரூப்புகளைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் 28 பேர் இன்று கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தமிழக அரசு வழங்கிய மடிக்கணினிகளை திருவாடானை தாலுகா தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியர் நடராஜனிடம் திருப்பியளித்தனர். மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நாளை ஒருநாள் அடையாள விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!