இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு: கைதானவருக்கு நீதிமன்ற காவல்!

கோவை இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் கைதான,  முபாரக்கை வருகின்ற ஜனவரி 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முபாரக்

இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமார் கடந்தாண்டு செப்டம்பர் 22-ம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுப்பிரமணியபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, தேடப்பட்டக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சதாம் உசேன் மற்றும் முபாரக் ஆகிய இருவரைப் பற்றியும் துப்பு கொடுத்தால் பரிசு தரப்படும் எனத் தென்னிந்தியா முழுவதும் காவல்துறை விளம்பரப்படுத்தியது. சதாம் உசேன் மற்றும் அபுதாகீரை சிறப்பு புலனாய்வுப் படையினர் கைதுசெய்தனர். அபுதாகீர் நிபந்தனை ஜாமீனில் இருக்கிறார். சதாம் உசேன் கைதுசெய்யப்பட்டபோது தலைமறைவான கோவை உக்கடம் கோட்டைப்புதூர் பகுதியைச்சேர்ந்த சுபேரை, கேரளாவில் வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைதுசெய்தனர்.

இந்நிலையில், சசிக்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முபாரக் என்பவரை, சி.பி.சி.ஐ.டி போலீஸார், பொள்ளாச்சியில் நேற்று கைதுசெய்தனர். இதையடுத்து, அவர் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை வருகின்ற 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!