தினகரனுக்கு ஏன் ஆதரவளித்தேன்? - சுப்பிரமணியன் சுவாமி விளக்கிய ராமாயணக் கதை | Subramaniyan swamy tweet about Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (27/12/2017)

கடைசி தொடர்பு:11:13 (27/12/2017)

தினகரனுக்கு ஏன் ஆதரவளித்தேன்? - சுப்பிரமணியன் சுவாமி விளக்கிய ராமாயணக் கதை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றார் சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன். அவரின் வெற்றிக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதே `தினகரன் வெற்றி பெறுவார்’ என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

subramaniyan swamy
 

தமிழக பா.ஜ.க-வினர் தினகரனுக்கு எதிராகப் பிரசாரம் நடத்தி வந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் தினகரனுக்கு ஆதரவான ட்வீட் அரசியல் வட்டாரங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. ``தினகரன் பணப்பட்டுவாடா செய்தவர். டெல்லி போலீஸால் விசாரிக்கப்பட்டவர். அப்படியிருக்க சுப்பிரமணியன் சுவாமி ஏன் தினகரனுக்கு ஆதரவாகக் கருத்து பதிந்து வருகிறார்?” என்பது போன்ற கேள்விகள் பா.ஜ.க வட்டாரத்தில் எழுந்தன.

இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக சு.சுவாமி பதிவிட்ட ட்வீட்டில், “கெட்டவர் என்று தெரிந்தும் தினகரனுக்கு ஆதரவாகப் பேசி வருவது ஏன் என்று பலர் என்னைக் கேட்கிறார்கள். ராமாயணத்தில் ராமர் பலசாலியான வாலியைத் (Bali) தேர்வு செய்யாமல் சுக்கிரீவனை ஏன் தேர்வு செய்தாரோ அதற்காகதான் நானும் தினகரனுக்கு ஆதரவாகப் பேசி வருகிறேன்!” என்று குறிப்பிடுள்ளார்.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க