அப்பா இல்லாத 251 பெண்களுக்கு இலவச திருமணம் செய்துவைத்த வைர வியாபாரி

வருடந்தோறும் அப்பா இல்லாத பெண்களுக்கு, சீர் வரிசையுடன் தன் செலவிலேயே பிரமாண்டமாக திருமணம் செய்துவைத்து வரும் சூரத் வைர வியாபாரி மகேஷ் சவான், இந்த வருடமும் 251 பெண்களுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

இலவச திருமணம்

அப்பா இல்லாத இளம்பெண்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கி இருப்பார்கள். அதனால், அவர்கள் திருமணத்துக்கான மண்டபம், உணவு, நகைகள், விலையுர்ந்த உடை, சீர்வரிசைப் பொருள்கள் ஆகியவற்றுக்கு அவர்களுடைய அம்மாவாலோ அல்லது சொந்தங்களாலோ செலவழிப்பது மிகவும் கடினமான விஷயம். அதனால்தான் வருடந்தோறும் அப்பா இல்லாத இளம்பெண்களுக்கு, தான் இலவசமாக திருமணம் செய்துவைத்து வருவதாக சொல்கிற இந்த வைர வியாபாரி, கன்னிகாதானம் செய்தால் கடவுள் அருள் கிடைக்கும் என்று நம்புகிறார். 

இலவச திருமணம்

இந்த மாஸ் திருமணத்தில், 5 முஸ்லிம் பெண்களுக்கும், ஒரு கிறிஸ்துவ பெண்ணுக்கும், ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட ஒரு  பெண்ணுக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இந்த கூட்டுத் திருமணத்தில் இன்னொரு ஸ்பெஷல், திருமணம் செய்துகொண்ட பெண்களுக்கு அவரவர் கலாசாரப்படி திருமணம் செய்வித்ததுதான். 

தவிர, தான் இலவசமாக திருமணம் செய்துவைத்த பெண்களுக்கு சோபா, பெட், வீட்டு உபயோகப் பொருள்கள் என்று  சீர்வரிசைப் பொருள்களையும் தந்து தான் ஒரு தங்கமான அப்பா என்று நிரூபித்திருக்கிறார் இந்த வைர வியாபாரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!