புத்தாண்டு தினத்தன்று பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்குக் காவல்துறை வைத்த செக்..!

புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் பெற தடையில்லாச் (என்.ஓ.சி) சான்று கிடைக்காது என்று சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

மெரினா புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு தினத்தின்போது சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவார்கள். மெரினா, பெசன்ட் நகர், ஈ.சி.ஆர் போன்ற இடங்களில் நிறைய பைக் ரேஸ் போட்டிகள் நடக்கும். பலர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவார்கள். இதனால் நிறைய விபத்துகளும் ஏற்படும். தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னைப் போக்குவரத்து போலீஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

அதில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ அல்லது பைக் ரேஸில் ஈடுபட்டலோ  பாஸ்போர்ட்டுக்கான தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படாது என்றும் கடும் நடவடிக்கைகள் பாயும் என்றும் சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார். 

மேலும், டிச.31-ம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 3 மணி வரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். சென்னை முழுவதும் 176 சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். கத்திப்பாரா, அண்ணா மேம்பாலங்கள் தவிர மற்ற மேம்பாலங்கள் இரவு11.30 மணி முதல் 1 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்படும். குயின்மேரி கல்லூரி வளாகம், பிரசிடென்சி கல்லூரி, சுவாமி சிவனாந்த சாலை, சேப்பாக்கம் ரெயில் நிலையம், லயால்ட்ஸ் ரோடு உள்ளிட்ட மெரினாவில் 8 இடங்களில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும். ” என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!