வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (28/12/2017)

கடைசி தொடர்பு:06:48 (28/12/2017)

பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடம்..!

இந்திய அளவில் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் இடங்களில் சென்னை முதல் இடத்தைப் பெற்றுள்ளது. 

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட ஆறு மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த வழக்குகளின் தரவுகளை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆறு மெட்ரோ நகரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, 75.8 லட்சம் பெண்கள் வசிக்கும் டெல்லியில் 13,808 குற்ற வழக்குகள் பெண்களுக்கு எதிராக பதிவாகியுள்ளன. அதன்படி, ஒரு லட்சம் பெண்களில் 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் 43 லட்சம் பெண்கள் உள்ளநிலையில், அவர்களுக்கு எதிராக 544 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது 1 லட்சம் பெண்களில் 12 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.