கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி! | This Kerala Gooseberry can solve lot of diseases

வெளியிடப்பட்ட நேரம்: 08:59 (28/12/2017)

கடைசி தொடர்பு:09:00 (28/12/2017)

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!

அதியமானுக்கு நெல்லிக்கனியை ஒளவையார் கொடுத்ததால் தமிழகத்தில் நெல்லிக்கனி பிரபலம் அடைந்தது. தற்போது கேரளாவை சேர்ந்த வியாபாரிகள் மினிடோர் வாகனத்தில் கேரள மலை நெல்லி விற்பனை  செய்துவருகிறார்கள். அதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள். இதனால் கேரள மலை நெல்லி கொங்கு மண்டலம் தாண்டி பெங்களூரு வரை பிரபலம் அடைந்துள்ளது.

இதுபற்றி விற்பனையாளர் அசோக், ''எங்க சொந்த ஊரு கேரளாவில் உள்ள பாலக்காடு. நாங்க சீசன் காலங்களில் கேரள மலைக்கிராமமான அட்டப்பாடியில் தோப்புகளாக பேசி மலை நெல்லியை வாங்கிக் கொள்ளுவோம். பிறகு முதிர்ந்த நெல்லிக் கனிகளை ஆட்களைவிட்டு பறிக்கச் செய்து சுமார் 2000 கிலோ நெல்லிக்கனிகளை மினிடோர் வண்டியில் ஏற்றிக்கொண்டு விற்பனையை தொடங்குகிறோம்.  

எங்களுடைய விற்பனை கேரளாவில் தொடங்கி வரிசையாக, மேட்டுப்பாளையம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு வரை சென்று விற்பனை செய்வோம். பறிக்கப்பட்ட இடத்தில் இருந்து கோவை வரை ஒரு கிலோ நெல்லிக்கனி 35 ரூபாய்க்கும், கோவையில் இருந்து ஓசூர் வரை ஒரு கிலோ நெல்லிக்கனி 40 ரூபாய்க்கும்,  பெங்களூருவில் ஒரு கிலோ நெல்லிக்கனி 50 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம். பயணச் செலவு ஆவதால் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விலை விற்பனை செய்கிறோம். ஆனால், கடைகளில் ஒரு கிலோ இந்த நெல்லி 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்வதால் குறைந்த விலைக்கு கொடுக்கிறோம்.

இந்த கேரளா மலை நெல்லி இல்லாமல் ஆயுர்வேத மருத்துவமே கிடையாது. அனைத்து வைத்தியத்துக்கும் இந்த கேரளா மலை நெல்லி பயன்படுகிறது. கேரளாவில் இந்த மலை நெல்லி 1364 நோய்களைத் தீர்க்கும் மருந்தாக இருப்பதாக எங்கள் கேரள மக்கள் நம்பி வருகிறார்கள். ஒரு ஆப்பிளை சாப்பிடுவதற்கு சமமானது ஒரு நெல்லிக்கனி சாப்பிடுவது.

இதைப் பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்று வெறுமனே சாப்பிடுகிறார்கள். இல்லையென்றால் ஊறுகாய், தேன் நெல்லி, அல்வா போன்றவை செய்து சாப்பிடுகிறார்கள். சுகர் நோயாளிகளுக்கு இந்த மலை நெல்லி சிறந்த திண்பண்டமாக இருப்பதோடு சுகரையும் போக்கும் மருந்தாகவும் இருக்கிறது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க