தமிழக மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி! செங்கோட்டையன் அறிவிப்பு 

கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ, மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு கொண்டு வருகிற பொதுத்தேர்வுகளுக்காக ‘ஸ்பீடு’ நிறுவனத்தின் மூலம் 100 இடங்களில் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதில் 75 ஆயிரம் மாணவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றும் மீதமுள்ள 312 மையங்களுக்கும் ஜனவரி 15–ந் தேதிக்குள் அந்த பணிகள் நிறைவுபெறும் என்றும் அதற்குப் பிறகு அனைத்து மையங்களிலும் இதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், மாணவர்களின் எதிர்காலத்தில் உள்ள அச்சங்கள் மற்றும் சந்தேகங்களை மனதில் கொண்டு, ஆசிரியர்கள் பாடத்துடன் நற்பண்புகளை இணைத்து, ‘கற்பித்தலும், கற்றலும்’ என்ற முறையில் கையேடு தந்து, அதன் மூலமாக மாணவர்களுக்காக பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கையேட்டில் பல்வேறு சிறப்புகள் இருக்கிறது. மாணவர்களுக்கு எப்படி கல்வியை கற்றுத்தருகிறோம். மாணவர்களுக்கான நற்பண்புகள், தேவையான பயிற்சிகள், எதிர்காலம், தன்னம்பிக்கை, கற்றல், கற்பித்தல் போன்ற பல்வேறு நிலைகள் அறிவு, ஆற்றல் போன்ற அனைத்தும் அதில் இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கற்றல் குறைபாடு உள்ள 10 லட்சம் தமிழக மாணவ, மாணவர்களுக்கு பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 100 மையங்களில் 75,000 மாணவர்களுக்கு கான்பிரன்ஸ் மூலம் போட்டித்தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!