`துணி துவைப்பதும் தட்டுக் கழுவுவதும்தான் எங்கள் வேலையா?' சப்-கலெக்டருக்கு எதிராகக் காெந்தளித்த அரசு ஊழியர்கள் | govt employees protest against chengalpattu sub collector jayaseelan

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (28/12/2017)

கடைசி தொடர்பு:16:22 (07/12/2018)

`துணி துவைப்பதும் தட்டுக் கழுவுவதும்தான் எங்கள் வேலையா?' சப்-கலெக்டருக்கு எதிராகக் காெந்தளித்த அரசு ஊழியர்கள்

கிராம உதவியாளர் வெங்கடேசன் என்பவரை செங்கல்பட்டு சார் ஆட்சியர் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு சார் ஆட்சியர் ஜெயசீலனுக்கு எதிராகக் கண்டன உரையாற்றினார்கள்.

சார் ஆட்சியர் ஜெயசீலன், அரசு ஊழியர்கள்

அப்போது, கண்டன உரையாற்றியவர்கள், “கிராம உதவியாளர்களைச் சார் ஆட்சியர் அலுவலக மாற்றுப்பணி என்று சொல்லி உத்தரவின் மூலம் அலுவலகம் வரச்சொல்கிறார் சார்ஆட்சியர் ஜெயசீலன். அந்த மாற்றுப் பணிக்குப் பின்னால் இருக்கும் விஷயம் பொதுமக்களுக்குத் தெரியவாய்ப்பில்லை. அசோக் டோங்ரே, நிரேஜ் மித்தல், அமுதா போன்ற கண்ணியமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இங்கே பணிபுரிந்திருக்கிறார்கள். இந்த இடத்தில் சார் ஆட்சியர் ஜெயசீலன் பந்தா செய்கிறார். தன்னை சுற்றி ஊழியர்கள் நிற்க வேண்டும் என நினைக்கிறார். நாங்கள் சார்ந்து இருக்கக்கூடிய இயக்கங்களின் மூலம் செய்யும் ஏரியைத் தூய்மைப்படுத்தும் பணி, செங்கை புத்தக திருவிழா போன்றவற்றை முன்னின்று செய்கிறார். அதை வரவேற்கிறோம். இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காகத்தான் நடத்திக்கொள்கிறார் என்பது தெரியும்.

அரசு ஊழியர்கள் ஆர்பாட்டம், செங்கல்பட்டு

மாற்றுப் பணிக்கு கிராம உதவியாளர்களைத் தன்னுடைய குடியிருப்புக்கு வரச்சொல்கிறார் ஜெயசீலன். அவர்களைத் தோட்ட வேலை செய்யச் சொல்கிறார். அவர் குடும்பத்தில் உள்ளவர்களின் துணியைத் துவைக்கவும் அவர் சாப்பிட்ட எச்சில் தட்டைக் கழுவிக் கொடுக்கவும் சமையல் வேலை செய்யவும், வீட்டைப் பெருக்குவதற்கும், ஓட்டடை அடிப்பதற்கும், தோட்ட வேலை செய்யவும் அங்கே இவர்கள் தேவைப்படுகிறார்கள். சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுப்பணி கொடுத்தால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ரெக்கார்டுகளைச் சுத்தப்படுத்தட்டும். அங்கே இருக்கும் அலுவலக வேலைகளைச் செய்யச் சொல்லுங்கள். இது அரசாங்கப் பணி. அதை யாரும் தவறு சொல்லவில்லை. ஆனால், உங்கள் சொந்த வேலைகளைச் செய்வதற்கு எங்களைப் பயன்படுத்தாதீர்கள்.

அவருடைய மனைவி ஒரு மருத்துவர். இங்கே வந்தபிறகுதான் அவர் திருமணம் செய்துகொண்டார். கிராம உதவியாளராக இருக்கக்கூடிய ஓட்டுநர் பயிற்சி பெற்றவர்களைத் தன்னுடைய கையாளாக வைத்துக்கொள்கிறார். சென்னையில் அவர் மனைவி பணிபுரியும் தனியார் மருத்துவமனைக்கு அரசாங்க கார் மூலம் அவரை கொண்டு செல்கிறார்கள். மீண்டும் அழைத்து வருகிறார்கள். திருப்போரூர் தாசில்தார் கார் இதற்காக இரவு பகலாகப் பயன்படுத்தப்படுகிறது. கொத்தடிமைபோல அரசு ஊழியர்கள் அதிகாரிகள் வீட்டில் வேலை செய்கிறார்கள். இந்த தற்காலிகப் பணிநீக்க உத்தரவை ரத்து செய்யாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும்” என எச்சரிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க