வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (28/12/2017)

கடைசி தொடர்பு:14:46 (28/12/2017)

`தனுஷ் என் மகன் என்பது ரஜினிக்குத் தெரியும்!' சூட்டைக்கிளப்பும் மேலூர் கதிரேசன்


"தனுஷின் உண்மையான பெற்றோர் நாங்கள்தான் என்பது அவரின் மாமனாரான நடிகர் ரஜினிக்கு நன்றாகத் தெரியும்" என்று மேலூரைச் சேர்ந்த கதிரேசன்.

தனுஷ் என் மகன்

நடிகர் தனுஷ் சிறு வயதில் காணாமல்போன தங்கள் மகன் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, தீர்ப்பு எதிராக வந்ததால் அமைதியாக இருந்த மேலூர் கதிரேசன், இன்று மதியம் மதுரைக் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் நம்மிடம் கூறும்போது, "நடிகர் ரஜினிகாந்த், தன் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். அப்போது பேசிய ரஜினி, தாய் தந்தையே தெய்வம் அவர்களை மதிக்க வேண்டும் என்று பேசுகிறார்.

ஆனால், இதுவரை என் மகன் தனுஷ் எங்களை வந்து பார்க்கவில்லை. என்னையும் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் என் மனைவியையும் சந்திக்க தனுஷுக்கு நடிகர் ரஜினி அறிவுறுத்த வேண்டும். தனுஷ் எங்கள் மகன்தான் என்பது நடிகர் ரஜினிக்குத் தெரியும். எங்கள் ஏழ்மை நிலையைப் பார்த்து எங்களுடன் சேர தனுஷ் விரும்பவில்லை. அவருக்கு அறிவுரை கூற நடிகர் ரஜினிக்கு என் கோரிக்கையை உங்கள் (ஊடகங்கள்) மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க