வெளியிடப்பட்ட நேரம்: 08:01 (29/12/2017)

கடைசி தொடர்பு:11:04 (29/12/2017)

தூத்துக்குடியில் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சா பறிமுதல்!

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்குக் கடத்த முயன்ற ரூ.11 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ கஞ்சாவை போலீஸார் 
தூத்துக்குடியில் பறிமுதல் செய்தனர்.  

தூத்துக்குடியில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்

தூத்துக்குடி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்த உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.  இதையடுத்து, போலீஸார் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி - திருச்செந்தூர் ரவுண்டா அருகில் ஆந்திர மாநில எண் கொண்ட காரை போலீஸார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரின் பின்பகுதியில் 3 சாக்கு மூட்டைகளில் 110 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.11 லட்சம் என போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, கஞ்சாவையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார்,  காரில் இருந்த ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரத்தினகுமார், சாய்குமார் ஆகிய 2 பேரை கைதுசெய்தனர்.   

தூத்துக்குடியில் 11 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

மதுரை, கோவில்பட்டி உள்ளிட்ட செக்போஸ்ட்களில் போலீஸாரின் சோதனை அதிகமாக இருந்ததால் தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்குச் சென்று பின், அங்கிருந்து கேரளாவுக்கு கஞ்சாவைக் கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது முதல்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என நுண்ணறிவு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க