``ஆட்சியாளர்கள் ஆன்டி பாகிஸ்தானியர்கள்!''- ஹஃபீஸ் சயீத் ஆவேசம் | Muslim league running in Pakistan are fake and were anti-Pakistan- Hafiz Saeed

வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (29/12/2017)

கடைசி தொடர்பு:11:40 (29/12/2017)

``ஆட்சியாளர்கள் ஆன்டி பாகிஸ்தானியர்கள்!''- ஹஃபீஸ் சயீத் ஆவேசம்

பாகிஸ்தானை ஏற்கெனவே இரண்டு பகுதியாக இந்தியா உடைத்தது, தற்போது, பலுசிஸ்தானையும் பிரிக்கத் திட்டம் தீட்டுவதாக  அரசியல்வாதியாக மாறியுள்ள தீவிரவாதி ஹஃபீஸ் சயீத் குற்றம்சாட்டியுள்ளார். 

ஹஃபீஸ் சயீத்

ஜமாத்-உத்-தாவா இயக்கத்தை நடத்திவரும் ஹஃபீஸ் சயீத், ’மில்லி முஸ்லிம் லீக்’ பெயரில் அரசியல் கட்சியை பாகிஸ்தானில் தொடங்கியுள்ளார். கட்சியின் லாகூர் அலுவலகத்தை அண்மையில் திறந்துவைத்த ஹஃபீஸ் சயீத், பாகிஸ்தான் ஆட்சியாளர்களை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். '' பாகிஸ்தான் அரசு இந்தியாவை எதிர்ப்பது போல, போக்கு மட்டுமே காட்டி வருகிறது. ஆனால், உண்மையில் இந்தியாவை சமாதானப்படுத்தவே பாகிஸ்தான் முயல்கிறது. பாகிஸ்தானை ஆட்சி செய்யும் முஸ்லிம் லீக், ஆன்டி- பாகிஸ்தான் கட்சி.

பாகிஸ்தானுடன் காஷ்மீர் மாநிலத்தை இணைக்க வேண்டுமென்று ஜின்னா விரும்பினார். இங்கே இருப்பவர்கள் ஜின்னாவின் கொள்கையைப் பின்பற்றவில்லை. ஜின்னாவின் எண்ணத்துக்கு விரோதமாகவே செயல்படுகிறார்கள். முஸ்லிம் லீக் கட்சி போலியாக செயல்படுகிறது. இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்குள்ளேயே தனக்கென்று ஒரு ராணுவத்தை உருவாக்குகிறார். முதலில் பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானை இந்தியா பிரித்தது. தற்போது, பலுசிஸ்தான் மாகாணத்தைப் பிரிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இந்தியா செயல்பட்டு வருகிறது'' என்று ஹஃபீஸ் சயீத் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க