கரூர் அருகே ரயில்வே டிராக்கில் மருத்துவ மாணவர் சடலமாக மீட்பு!

கரூர் மாவாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் ரயிலில் அடிப்பட்டு இறக்க, அது தற்கொலையா, விபத்தா என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள். 
 

 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கள்ளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சேசுராஜ் என்பவரின் மகன் அமிர்தராஜ். திருச்சி மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்துவந்த இவர், வழக்கம்போல், திருச்சி செல்வதற்காக இன்று காலையில் கிளம்பி இருக்கிறார். இந்நிலையில், அவர் இறந்த நிலையில் சடலமாக கள்ளப்பள்ளி - கருப்பத்தூர் இடையிலான ரயில் பாதையில் கிடந்தார். அமிர்தராஜின் உடல் அருகில் கிடந்த அடையாள அட்டையை வைத்து, மருத்துவ மாணவர் ஒருவர் இறந்துகிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த லாலாபேட்டை மற்றும் குளித்தலை ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், ரயில் பாதையில் கிடந்த அமிர்தராஜின் உடலைக் கைப்பற்றி, அதை உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அமிர்தராஜ், திருச்சி மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவருகிறார். அவர் இறப்புகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!