வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (29/12/2017)

கடைசி தொடர்பு:17:41 (29/12/2017)

சென்னை விமான நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த பஸ்! #Video

Bus Fire


சென்னை விமான நிலையத்தில் விமானம் நிற்கும் இடத்துக்குப் பயணிகளை அழைத்துப் போகவும், அங்கிருந்து பயணிகளை அழைத்து வரவும் பஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இண்டிகோ விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பஸ் ஒன்று இன்று காலை பயணிகளை இறக்கிவிட்டு விமானங்கள் நிற்கும் பகுதிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் பஸ் திடீரெனத் தீப்பிடித்தது. மளமளவென தீ பரவி பஸ் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. உடனே விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீப்பிடித்தபோது பஸ்சின் உள்ளே பயணிகள் யாரும் இல்லை. இதனால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது. பஸ் தீப்பிடித்து எரியும் வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னை விமான நிலைய மேற்கூரை அடிக்கடி உடைந்து விழுந்து விபத்து நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.