வெளியிடப்பட்ட நேரம்: 05:40 (30/12/2017)

கடைசி தொடர்பு:10:41 (30/12/2017)

"வா தலைவா போருக்கு வா" ரஜினிக்காகப் பாடல் வெளியிடும் ராகவா லாரன்ஸ்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடசத்திரங்களில் ஒருவர் ரஜினிகாந்த். தமிழகம் மட்டுமன்றி, இந்திய அளவிலும் வெளிநாடுகளிலும் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இவரின் ரசிகர்கள் ரசிகர் மன்றம் அமைத்துள்ளனர். இதற்கிடையில் ரஜினி ஒவ்வொருமுறை ரசிகர்களைச் சந்திக்கும்போதும் அவர் அரசியலுக்கு வருவதை அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளிவரும்.   

ரஜினி

சமீபத்தில் ரஜினிகாந்த் 31-ம் தேதி தன் அரசியல் பிரவேசம் குறித்து கூறுவதாகத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களை இதேபோல் சந்தித்த போது 'போர் வரும்போது சந்திப்போம்' என ரசிகர்களிடம் பேசினார்.
இந்நிலையில் ரஜினியின் ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் 'வா தலைவா போருக்கு வா' என்ற தலைப்பில் பாடல் ஒன்றை வெளியிட உள்ளார். இன்று காலை 11 மணியளவில் அந்தப் பாடலை வெளியிடவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் ரஜினியின் பிறந்தநாளுக்காக பாடல் ஒன்றை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.