கச்சத்தீவு அருகே கஞ்சா கடத்திச் சென்ற இந்திய மீனவர் உட்பட 4 பேர் சிக்கினர்! | Four arrested, including the Indian fisherman who smokling Kanja near Katchatheevu.

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (30/12/2017)

கடைசி தொடர்பு:19:00 (30/12/2017)

கச்சத்தீவு அருகே கஞ்சா கடத்திச் சென்ற இந்திய மீனவர் உட்பட 4 பேர் சிக்கினர்!

இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற ஒரு இந்தியர் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 39 கிலோ கேரள கஞ்சாவையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்குப் போதைப் பொருள்களான கஞ்சா, புகையிலை, மாத்திரைகள்  உள்ளிட்டவை கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. இதுபோன்ற சம்பவங்களால் மீன்பிடிக்க செல்லும் உண்மையான மீனவர்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இலங்கைக்கு கஞ்சா கடத்திய போது இலங்கை கடற்படையினரிடம் பிடிபட்டவர்கள்

இந்நிலையில், கச்சத்தீவு பகுதியில் கஞ்சா கடத்தல் நடப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் காரை நகர் கடற்படையினர் அப்பகுதியில் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான நிலையில் உலவிய படகு ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.  இந்த சோதனையின்போது அந்தப் படகில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, படகில் இருந்த ஒரு இந்திய மீனவர் மற்றும் 3 இலங்கை நபர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு கிலோ அளவில் சிறிய பார்சல்களாக அடைக்கப்பட்ட 18 பார்சல்களிலிருந்து 39 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது .மேலும், இவர்கள் பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


[X] Close

[X] Close