நாட்டை கொள்ளைக்காரர்களிடம் கொடுத்துவிட்டோம்..! சீமான் சீற்றம்

"வெள்ளைக்காரர்களை விரட்டி விட்டு நாட்டை கொள்ளைக்காரர்களிடம் கொடுத்து விட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு என்ற ஊரில் இயற்கை வேளான் அறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் கூட்டம் நேற்று  (30.12.2017) இரவு 'நாம்தமிழர்' கட்சியின் சார்பில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  வந்திருந்தார். மேடையில் இரண்டு பக்கமும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆளுயர நெற்கதிர்கள் வைக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு மாலை ஆறரை மணிக்கே மேடைக்கு வந்துவிட்டார் சீமான். 

அப்போது பேசிய அவர், "நம்மளை வெள்ளைக்காரன் அடிமைப்படுத்தி வெச்சிருக்கான்னு அவனை விரட்டினோம். ஆனால், அவனிடமிருந்து நாட்டை மீட்டு கொள்ளைக்காரர்களிடம் கொடுத்து விட்டோம். ஒரு நாட்டில் ஒரே ஒரு விவசாயி ஏழை என்றால், அந்த நாடு ஏழை நாடாகவே கணக்கில் கொள்ளப்படும். அப்படி என்றால், நமது நாடு எவ்வளவு மோசமான ஏழ்மை நிலையில் இருக்கிறது பாருங்கள். ஒரு நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால், அது நாடு இல்லை. சுடுகாடு.

இந்தநாடு சுடுகாடாக எப்போதோ மாறிவிட்டது. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் விவசாயி சாகிறான் என்று செய்தி வந்தால் ,நாளை நாம் ஒருவேளை உணவுக்கூட கிடைக்காமல் சாகப் போகிறோம் என்பதற்கான முன்னறிவிப்பு அது' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!