ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் காளைகள்..! | Bulls ready for bull taming

வெளியிடப்பட்ட நேரம்: 05:50 (31/12/2017)

கடைசி தொடர்பு:05:50 (31/12/2017)

ஜல்லிக்கட்டுக்குத் தயாராகும் காளைகள்..!

jallikattu

மதுரையில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு மிகச் சிறப்பாக நடைபெறும். கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் பாரம்பரியத்தக்க் காக்கும் விதமாக பலரும் காளைகள் வளர்பது, மாடு பயிற்சியும் என்று பல முயற்சிகள் செய்திவதுகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு 15 நாட்களுக்கும் குறைவான நாள்களே உள்ளநிலையில், மதுரையில் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ஆங்காங்கே பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.  இந்த ஆண்டு வழக்கம்போல் பொங்கலை முன்னிட்டு நடைபெறவிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆகையால் தற்போது மதுரை மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகேயுள்ள சோளங்குருணியில் இன்று அப்பகுதி இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஜல்லிக்கட்டு பயிற்சி, மாடு பிடி வீரர்களால் வழங்கப்பட்டது. மேலும் மாடுபிடி வீரர் சோமன் கூறுகையில், 'ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பாக மட்டுமன்றி, தொடர்ந்து அவற்றிற்காக வாரம் ஒருமுறை பயிற்சி அளிக்கப்படுகிறது.

நீச்சல், நடை ஆகியவை இந்தப் பயிற்சியில் முக்கியப் பங்காகும். புரதச்சத்து மிக்க உணவு வைக்கோள் இந்தக் காளைகளுக்கு வழங்கப்படும். பருத்தி, கானப்பயிறு, பேரீச்சம்பழம் ஆகியவை பிரதான உணவுகளாக இருக்கும். தற்போது வழங்கப்படும் அரை மணி நேர நீச்சல் பயிற்சி என்பது, ஒரு மாடு களத்தில் 25 நிமிடம் நின்று விளையாடுவதற்கு ஏதுவான உடல் உறுதியைக் கொடுக்கும். ஆகையால் காளை மாடுகளுக்கு நீச்சல் பயிற்சி மிகவும் முக்கியம். இளைப்பு போன்ற குறைபாடுகளுக்காக நாட்டு மருந்துகளும் வழங்கப்படும்.

மண்ணைக் குத்தி பயிற்சி எடுக்க வைப்பதன் மூலம் வீரர்களைக் குத்துவதற்காக என்பது போன்றெல்லாம் தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. அவையெல்லாம் உண்மையல்ல. பொதுவாக காளைகளின் கொம்புகளிலுள்ள உறுதித்தன்மைக்காக அவை செய்யப்படுகின்றன. இந்தாண்டு ஜல்லிக்கட்டைப் பல நாடுகளில் நடத்த உள்ளார்கள் என்ற செய்தியை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என்று தெரிவித்தார்.


[X] Close

[X] Close