வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (31/12/2017)

கடைசி தொடர்பு:14:45 (31/12/2017)

'எந்த சிஸ்டம் சரியில்லை என்று சொல்லுங்கள்!' - செல்லூர் ராஜு கேள்வி

''அரசியல் இயக்கத்தை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனி ரஜினி அறிந்து கொள்வார்'' என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.  

 

sellur raju

 அரசியலுக்கு வருவதாக ரஜினியின் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகளுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் வரவேற்றும், சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். இந்த நிலையில் தன்னை ரஜினி ரசிகர் என்று ஏற்கனவே சொல்லிக்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு, இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது,

''ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார். இது ஐனநாயக நாடு, யார் வேண்டுமானலும் வரலாம் முதலில் மக்கள் பணியாற்றட்டும், எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் சமூக சீர்திருத்த கருத்துக்களை கொண்டு வந்தவர். அண்ணா அவர்கள்  எம்.ஜி.ஆரை இதயக்கனி என்று அழைத்தார். தமிழகத்தில் எந்த சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொல்லட்டும், அதை சரி செய்துகொள்கிறேம். அரசியல் இயக்கத்தை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனி அவர் அறிவார். ஆர்.கே.நகர் தேர்தலில் பல கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டும் திமுகவுக்கு டெபாசிட் காலியாகிவிட்டது. தினகரன் வெற்றி நிரந்தரமானது அல்ல. ரஜினியால் மட்டுமில்லை வேறு யாராலும் இந்த இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க