இலங்கை கடற்படையினரால் 13 மீனவர்கள் சிறைபிடிப்பு! - வருடத்தின் கடைசி நாளிலும் தொடரும் போராட்டம்

வருடத்தின் கடைசி நாளில் மேலும் 13 மீனவர்களை சிறை பிடித்து சென்றிருக்கும் இலங்கை கடற்படையினர் நடவடிக்கை மீனவர்கள் குடும்பங்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகள் 

கடந்த 2 வருடங்களாக பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களையும் அவர்களது வாழ்வாதாரமாக உள்ள படகுகளையும் சிறை பிடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது இலங்கை கடற்படை. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 170-க்கும் அதிகமான படகுகளை பிடித்து வைத்துள்ளனர். ஆனாலும் இலங்கை கடற்படையினரால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து  மீனவர்களை மீட்போம் என கடந்த 3 ஆண்டுகளாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனாலும் இலங்கை கடற்படையினரின் தொல்லைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.


நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஜெயசீலன், அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற சீமோன், டோனா, திவாகர், இருதயம், கிறிஸ்து உள்ளிட்ட 13 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட இந்த மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசந்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 


ஏற்கனவே இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 69 மீனவர்கள் இன்று காரைக்கால் துறைமுகத்திற்கு  திரும்ப உள்ள நிலையில் மேலும் 71 மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நாளை புத்தாண்டு கொண்டாட வேண்டிய நிலையில் உள்ள மீனவர்களை வருடத்தின் கடைசி நாளான இன்று இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றிருப்பது மீனவர் குடும்பங்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!