புத்தாண்டு வழிபாட்டிற்குத் தயாரான பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில்!

 பிள்ளையார்பட்டி கற்பக விநயாகர் கோயிலில் பக்தர்கள் புத்தாண்டு தரிசனத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி - திருப்புத்துார் ஊர்களுக்கு இடையில் அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலயம். உலகப்புகழ் பெற்ற இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி,சங்கடகர சதுர்த்தி, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட நாள்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுண்டு. அந்தவகையில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அதிகமானோர் வருவது வழக்கம். இதனால் நாள் முழுவதும் பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். அதை முன்னிட்டு சிறப்பு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது புத்தாண்டிற்காக கோயில் நடை அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்படும். சாதாரண நாட்களில் தைப் பூசம் வரை, காலை 5 மணி முதல் இரவு 9 மணிவரைக்கும் நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும். புத்தாண்டு தினத்தன்று தொடர்ந்து நடை சாத்தப்படாமல் இருப்பதால்,  இரவு 9:30 மணி வரை விநாயகரை, பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மேலும் பக்தர்களுக்கு உணவு, குடி தண்ணீர், சுகாதார வசதிகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு கார் ,பைக் மூலம் வரும் பக்தர்களுக்கு பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று கோயில் அறங்காவலர்கள் கோனாப்பட்டு எஸ்.பி.அருணாசலம், அரிமளம் என்.சிதம்பரம் ஆகியோர் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!