சொந்தத் தொகுதியில் ஆவேசப்பட்ட ராசா!

'2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்வது அவர்களின் உரிமை, அதிலும் வெற்றிபெறுவேன்' என்று சொந்தத் தொகுதியில் ஆவேசப்பட்டார், ராசா.

                     
2ஜி வழக்கிலிருந்து விடுதலையான பிறகு, ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூர், அரியலூருக்கு வருகிறார் என்றதுமே, தி.மு.க தொண்டர்கள் திருச்சி மாநகரையே ஸ்தம்பிக்கவைத்தார்கள்.இரண்டு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க தொண்டர்கள் மற்றும் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்துவந்தார்.

                          
இன்று காலை திருச்சி விமானநிலையம் வந்திறங்கிய ராசாவுக்கு, அக்கட்சியின் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்தனர். இதேபோன்று, பெரம்பலூர் மாவட்ட எல்லையான பாடாலூரில், ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் சார்பில் கிருஷ்ணமூர்த்தி சார்ப்பில், மேளதாளங்களோடு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

                      

இதேபோன்று துரைமங்கலம்,பெரம்பலூர் நகரம் சார்ப்பில் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், பழைய பேருந்து நிலையத்தில் காந்தி மற்றும் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, அவரது கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டிய பின், ” 7 ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி வழக்கைப் பூதாகரமாக்கி, கிராமப்புறங்களிலும் தொலைத்தொடர்பு வசதி கிடைப்பதற்காக எடுத்த முயற்சியை ஊழல் என்று சித்திரித்தனர். இதில் பெரும் பங்கு ஊடகங்களுக்கும் உண்டு என்று முடித்துகொண்டார்.

                     

ராசா, சொந்த ஊரான வேலூருக்குச் சென்று, அவரது தாயார் நினைவிடத்தில் மாலை வைத்து வணங்கினார். பின்பு, குன்னம் வழியாக அரியலூர் வந்தார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ராசா, 2ஜி வழக்கிலிருந்து நான் விடுதலையானவுடன், போகும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

                   

இது, மகிழ்ச்சியாக உள்ளது. 2ஜி வழக்கில் மேல்முறையீடுசெய்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அதிலும் நான் வெற்றிபெறுவது உறுதி என முடித்துவிட்டு, செயங்கொண்டம், ஆண்டிமடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட பின், சென்னை கிளம்பினார் . நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!