வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (01/01/2018)

கடைசி தொடர்பு:11:19 (01/01/2018)

ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து!

ரஜினி

ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “ரொம்ப பில்ட் அப் கொடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எனக்கு மீடியாவை பார்த்தால்தான் பயம். அரசியலைப் பார்த்தால் பயம் இல்லை.  மற்றபடி, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது, காலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனிக் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன்” என்று பரபரப்பாக அறிவித்தார்.

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு, தமிழகத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசன், ரஜினியின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். பா.ஜ.க தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். அதே சமயம், சுப்ரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

ஒருபுறம் அரசியல் பிரவேச அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மறுபுறம் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 'என்னை வாழ்த்திய, என்னை வாழவைக்கும்  தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த  நன்றிகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்' என்று ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.