வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/01/2018)

கடைசி தொடர்பு:11:02 (01/01/2018)

'ஒரு வாக்கைக்கூட ரஜினி பெறமுடியாது'! அமைச்சர் ஜெயக்குமார் பளீச்

'அ.தி.மு.க வாக்கு வங்கியிலிருந்து ஒரு வாக்கைக்கூட நடிகர் ரஜினிகாந்த் பெறமுடியாது' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Jayakumar


அரசியலுக்கு வருவது உறுதி என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிவித்தார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம். இதில் மாறுபட்ட கருத்தே இல்லை. கட்சிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கத் தீர்மானிப்பது மக்கள்தான். கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள ரஜினி காந்த்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரஜினியின் பேச்சை திசைதிருப்ப வேண்டும். ரஜினி, அ.தி.மு.க என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அவர், தி.மு.க-வைக்கூட சொல்லி இருக்கலாம். அ.தி.மு.க-வைச் சொன்னால், நாங்கள் பதில் தருவோம். பொதுவாகச் சொன்ன கருத்துக்கு பதில் அளிக்க முடியாது.

ரஜினி வருகையால் அ.தி.மு.க-வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியில் இருந்து ஒரு வாக்கைக்கூட ரஜினி உள்பட யாரும் பெறமுடியாது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியா என்பதை ரஜினிதான் முடிவுசெய்ய வேண்டும்.ஜெயலலிதா அரசைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் மு.க. ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் இருக்கிறது. 2021-ம் ஆண்டு வரை அ.தி.மு.க அரசு நீடிக்கும். அதன் பின்பும் அ.தி.மு.க ஆட்சி அமையும். ஜெயலலிதாவை ஏமாற்றிக் கொள்ளையடித்த பணத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார் ” என்றார்.