வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (01/01/2018)

கடைசி தொடர்பு:10:44 (01/01/2018)

ரஜினி அரசியலுக்கு வருவதுபற்றி சிவகார்த்திகேயன் சொல்வது என்ன?

'நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி' என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார்.


சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘ நான் அரசியலுக்கு வருவது உறுதி. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று அறிவித்தார். தன்னுடைய அரசியல், சாதி, மத பேதமற்ற ஆன்மிக அரசியலாக இருக்கும் என்றும் ரஜினி கூறினார். இது, அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. ரஜினியின் அரசியல் பிரவேசம்குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துவருகிறார்கள். அதுசம்பந்தமாக விவாதம் நடைபெற்றுவருகிறது. 

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். சிவகார்த்திகேயன், தீவிர ரஜினி ரசிகர் ஆவார். அவரிடம் ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம்குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த சிவகார்த்திகேயன், “திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்ற முறையில் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி. அதேசமயம், யார் ஆள வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்” என்று பதில் அளித்தார்.