வடகிழக்குப் பருவமழை சராசரி அளவைவிட குறைவு!

Rain

வடகிழக்குப் பருவமழையால் அதிகம் பயன்பெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தென் மேற்குப் பருவமழை, தமிழகத்துக்கு பெரிய அளவில் கைகொடுப்பதில்லை. மொத்த மழையில் 48 சதவிகிதத்தை வடகிழக்குப் பருவமழையே அளிக்கிறது. வடகிழக்குப் பருவமழை, அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த 3 மாத காலத்தில், தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீட்டர் மழை பெய்ய வேண்டும். அக்டோபர் மாதத்தில் 18 செ.மீட்டர், நவம்பர் மாதத்தில் 17 செ.மீட்டர், டிசம்பர் மாதத்தில் 9 செ.மீட்டர் என இந்த மழை அளவு இருக்க வேண்டும்.

2017-ம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழை பெய்தாலும், டிசம்பர் மாதத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. ஆக, தமிழகத்தில் சென்ற ஆண்டும் சராசரி அளவைவிட வடகிழக்குப் பருவமழை குறைந்துள்ளது. 35 செ.மீட்டர் மழையே கிடைத்துள்ளது. அதேசமயம், சென்ற ஆண்டில் தென் மேற்குப் பருவமழை வழக்கத்தைவிடவும் அதிகமாகப் பெய்துள்ளது. வழக்கமாக 32 செ.மீட்டர் மழை பெய்யும் இடத்தில் 41 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழை குறைந்தாலும் பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. எனவே, இந்த ஆண்டு தண்ணீர் பிரச்னை பெரிய அளவில் இருக்காது என்று நம்பப்படுகிறது. 2016-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!