வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த ரஜினி! | Rajinikanth wishing fans for NewYear

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (01/01/2018)

கடைசி தொடர்பு:13:20 (01/01/2018)

வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த ரஜினி!

புத்தாண்டை ஒட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினி, தன் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

ரஜினிகாந்த்
 

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துள்ளதை அடுத்து,  உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தின் உள்ளனர். திரைப் பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். புத்தாண்டு தினத்தில், அவரைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரின் போயஸ் இல்லத்தின் முன் கூடியிருந்தனர். 

ரசிகர்களைக் காண வீட்டிலிருந்து வெளியே வந்த ரஜினியைப் பார்த்து, அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியுடன் அசத்தல் கெட்டப்பில் ரஜினி, ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.  பொதுவாக, விழாக்களில் கலந்துகொள்ளும்போது, கறுப்பு அல்லது வெள்ளை பைஜாமாக்களை அணிவதுதான் ரஜினியின் பழக்கம். தற்போது, புதிதாக வேட்டி சட்டை அணிந்து உற்சாகமாக ரசிகர்கள் முன்தோன்றி, இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க