அதிகரிக்கும் இளம் சிறார்கள் மீதான குற்ற வழக்குகள்... கவலையில் சமூக ஆர்வலர்கள்!

குற்ற நடவடிக்கைகளில் இளம் சிறார்கள் ஈடுபடுவது தமிழகத்தில் அதிகரித்துவருவதாக அதிர்ச்சியான தகவலை தேசிய குற்றப்பதிவு புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது. 

இளம் சிறார்கள்

இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், "தமிழகத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரித்துவரும் சூழலில், கடந்த சில ஆண்டுகளாக இளம் சிறார்கள் குற்றங்களில் ஈடுபட்டுவருவது அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. தேசிய குற்றப்பதிவு புள்ளிவிரங்களின்படி, கடந்த 2015-ம் ஆண்டு 2,795 சிறார்களும், 2016-ம் ஆண்டு 2,927 சிறார்களும், 2017-ம் ஆண்டு 3,235 சிறார்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்னிக்கை அதிகரித்துவருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்டு தண்டனைக்குள்ளாகும் சிறார்களை,  சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகள் திருத்துவதற்குப் பதில், மீண்டும் அவர்களை குற்றங்கள் செய்யத் தூண்டும் வகையில் அவ்விடங்கள் அமைந்துள்ளன. அதில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால், வளரும் தலைமுறை குற்ற உணர்ச்சி இல்லாமல் குற்றங்களில் ஈடுபடத் தொடங்கிவிடும்" என்கிறார்கள் வேதனையுடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!