படுகாயம் அடைந்தவர்களில் 99% பேர் மது அருந்தியிருந்தார்கள்! - மருத்துவர்கள் தகவல்

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, தமக்குத் தாமே  ஏற்படுத்திக்கொள்ளும் விபத்துகளைப் பற்றியும் உற்று கவனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்துக்களைப் பற்றி விசாரிக்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சென்றபோது, தலைக்கவசத்தை கையில் மாட்டியபடி அங்கும் இங்கும் நின்றுகொண்டிருந்தார்கள், விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நண்பர்கள். சற்று இடைவேளி விட்டு, ஆம்புலன்ஸ் வருவதும் போவதுமாக இருந்தன. விபத்துக்குள்ளானவர்கள், ஒன்றன் பின் ஒன்றாக வந்துகொண்டே இருந்தனர்.

11 மணி வரை 69 பேர் படுகாயம்

நேற்று முன் தினம் மாலை 7 மணியிலிருந்து நேற்று காலை 6 மணிவரை (11 மணி நேரத்தில்), 69 பேர் விபத்துக்குள்ளாகி சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களே அதிகம் பேர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னையில் நடந்த ஐந்து விபத்துகள்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது எனப் போலீஸார் கூறுகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!