ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை! - கிருஷ்ணபிரியா ஆஜர்

ஜெயலலிதா மரணம் பற்றிய நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை கமிஷன் முன்பு, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். 

krishnapriya
 

ஜெயலலிதா, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள்  சிகிச்சைபெற்றுவந்த அவர்,  டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் இருப்பதாகவும் அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

arumugasamy
 

முதல்நாளில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன், ஆணையம் முன்பாக ஆஜரானார். ஜெயலலிதா கைரேகை தொடர்பாகப் பல்வேறு கேள்விகளை ஆணையத்திடம் அவர் முன்வைத்தார். இதையடுத்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அண்ணன் மகன் தீபக்கும் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராகினர்.  இவர்களைத் தொடர்ந்து, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா தற்போது சென்னை சேப்பாக்கம் கலச மகாலில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜராகியுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!