``நான் அப்படி பேசவில்லை!'' - விளக்கும் பிரகாஷ்ராஜ் | Prakash Raj clarifies about his statement

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (02/01/2018)

கடைசி தொடர்பு:11:06 (02/01/2018)

``நான் அப்படி பேசவில்லை!'' - விளக்கும் பிரகாஷ்ராஜ்

ன்னடர்கள்தான் கர்நாடகாவை ஆள வேண்டுமென்று பேசவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். 

நடிகர் பிரகாஷ்ராஜ்

பெங்களூரு பத்திரிகையாளர்கள் மன்றத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்றுப் பேசினார். அப்போது, கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என்று பேசியதாக செய்தி வெளியானது.  நடிகர்  பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழகத்தில் ஒரு மாதிரியாகவும் கர்நாடகாவில் வேறுமாதிரியாகவும் பேசி இரட்டை நிலைப்பாட்டுடன் உள்ளார் என்று  சமூக வலைதளங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

இதுகுறித்து தன் ட்விட்டரில் அவர் விளக்கமளித்துள்ளார். அதில், ``தகுதி வாய்ந்தவர்கள்  நாட்டின் எந்த மாநிலத்துக்கும் தலைவராகலாம் என்பதே  இந்தியனான என் நிலைப்பாடு. கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உட்பட எந்த மாநிலமாக இருந்தாலும், பிரித்தாளும் தன்மை கொண்ட, வகுப்புவாத அரசியல்வாதிகளை இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெற விடமாட்டோம் என்றுதான் பேசினேன். என்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து, வெறுப்பு உணர்வை தூண்டுவதன் மூலம் உங்களிடம் பயம் தெரிகிறது. அது உங்களின் விரக்தி மனநிலையையே உறுதிப்படுத்துகிறது'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க