முடி கொட்டியதால் உயிரை மாய்த்துக்கொண்ட ஐ.டி இளைஞர்!

முடி கொட்டியதால், மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

techie


மதுரையில், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த 27 வயது மிதுன்ராஜ், பெங்களூரில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்துவந்தார். இவர், விடுமுறையில் வீட்டுக்கு வந்திருக்கிறார். தாயார் கோயிலுக்குச் சென்ற சமயத்தில், தன் அறையில் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “மிதுனுக்கு வெகு நாள்களாக தோல் பிரச்னை இருந்துள்ளது. அது உச்சந்தலைவரை பரவி, முடி கொட்ட ஆரம்பித்திருக்கிறது. பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இதனால் மனமுடைந்த மிதுன், தற்கொலை செய்துகொண்டார்” என்றனர். உயிரிழந்த மிதுன், சென்னை இன்ஃபோசிஸில் பணிபுரிந்தவர். ஐ.டி துறையில் இருப்பவர் முடி கொட்டும் பிரச்னைக்காக உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த மிதுன்ராஜ்ஜின் நெருங்கிய நட்பு வட்டாரங்கள், 'மிதுன்ராஜ், சுமார் ஐந்து ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததார். அந்தக் காதல் தோல்வியில் முடிந்ததால் தற்கொலை செய்துகொண்டதாக' தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!