வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (02/01/2018)

கடைசி தொடர்பு:18:08 (02/01/2018)

கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்..!

பண மோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை ஏற்கெனவே கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஜனவரி 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. பண மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம், ஐ.எஸ்.எஸ் மீடியா மற்றும் அதன் இயக்குநர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜியா ஆகியோர் மீது அமலாகத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.