வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (03/01/2018)

கடைசி தொடர்பு:03:00 (03/01/2018)

"வருங்காலத் தங்கத்தாரகையே...!" ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு அஜீத் மகளுக்கு மதுரையில் போஸ்டர்

'வருங்காலத் தங்கத்தாரகையே..' என்று நடிகர் அஜீத் மகளின்  படத்தைப் போட்டு ஒட்டப்படிருந்த போஸ்டர் மதுரையில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

நடிகர் அஜீத்- ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள் இன்று வருகிறது. இதை தமிழகம் முழுக்க அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். மதுரையில் நேற்றே பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் அஜித் ரசிகர்கள்.

மதுரையில் பட்டைய கிளப்பிய

மதுரையெங்கும் வாழ்த்து சொல்லி பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி பலரையும் திரும்பப் பார்க்க வைத்துள்ளனர் அவர்கள். நேற்று காலை மதுரையில் ஆதரவற்றவர்களை தேடிச்சென்று நலத்திட்ட உதவிகளை செய்தவர்கள், கோயில்களில் அன்னதானம் வழங்கினார்கள்.  

அவர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதிலும் குறிப்பாக அனோஷ்காவை  ஜெயலலிதா கெட்டப்பில் சித்தரித்த போஸ்டர் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதில், 'எதிர்கால தங்கத்தாரகையே' என்று குறிப்பிட்டிருந்தார்கள். இது ஜெயலலிதாவை வாழ்த்த அ.தி.மு.கவினர் பயன்படுத்திய வாசகமாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க