18 மாதங்களில் நிறைவேற்றிய திட்டங்கள்: துண்டுப் பிரசுரம்மூலம் மக்களிடம் கொண்டுசேர்த்த தி.மு.க எம்.எல்.ஏ.

மதுரை மத்திய தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தற்போது இருக்கும் அரசியல்வாதிகளில் மிகவும் வித்தியாசமானவர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் பலரும் செய்ய முடியாத பல பணிகளைத் தனது தொகுதிக்குச் செய்துவருகிறார். இந்த நிலையில், எம்.எல்.ஏ-வாகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு 18 மாதங்களில், மதுரை மத்திய தொகுதியில் செயல்படுத்திய திட்டங்கள்குறித்து துண்டுப் பிரசுரம் அடித்து தொகுதி மக்களிடம் அவர் விநியோகித்துள்ளார்.

அதில் அவர், "மக்களோடு முன் நின்று மக்களுக்காக செயலாற்றிடும் மரபுவழி வந்த நான், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று 18 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அரசியல் பாரம்பர்யமிக்க குடும்ப அடையாளம் என்பதை மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொண்டு தலைவர் கலைஞர், செயல் தலைவர் தளபதியார் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் நான் மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்திலுமே என்னுடைய  செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதோடு, அதைத் தொகுதி சார்ந்த படிப்படியான வளர்ச்சிக்காகப் பயன்படுத்திவருகிறேன். அடிப்படை பிரச்னைகளில் முக்கியத்துவம் செலுத்தி, உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒவ்வொரு வாக்காளரும் என்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்தது சரி என நினைக்கக்கூடிய அளவில் செயல் படவேண்டும் என உழைக்கிறேன். அதற்கு எப்போதும் ஒத்துழைப்பு தரும் மதுரை மத்திய தொகுதி மக்களாகிய உங்களுக்கு எனது நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!