குமரி மாவட்டத்தை அதிரவைத்த டாஸ்மாக் விற்பனை!

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 8 நாள்களில் சுமார் 25 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக்  கடைகள் அகற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, 133 ஆக இருந்த கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 103 ஆகக் குறைந்தது. இதனால், மது விற்பனை குறையும் என  எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த வித பாதிப்புமில்லாமல், தினமும் 2 கோடிக்கு மேல் டாஸ்மாக் மது விற்பனை நடந்தது.

கடந்த 8 நாள்கள் விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ், புத்தாண்டுப் பண்டிகைகளை முன்னிட்டு,  டாஸ்மாக் விற்பனை  இரண்டு மடங்காக இருந்தது. கடந்த 24-ம் தேதி மட்டும் 4 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரத்து 680 ரூபாய்க்கு டாஸ்மாக் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை  8 நாள்களில் மட்டும் 25 கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 525 ரூபாய்க்கு டாஸ்மாக் மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் குமரி மாவட்டத்தில் 79 கோடியே 95 லட்சத்து 53 ஆயிரத்து 110 ரூபாய்க்கு டாஸ்மாக் விற்பனையானது. இது, கடந்த ஆண்டைவிட 10 சதவிகிதம் அதிகமாகும். ஒகி புயல் வந்தும், குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் விற்பனை குறையாதது ஆச்சர்யமாக இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!