இந்த 12 பேர்தான் இனி பேசுவார்கள்! நிர்வாகிகளுக்குக் கடிவாளம் போட்ட ஓ.பி.எஸ், இ.பி.எஸ். | ADMK appoints 12 members as official spokespersons

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (03/01/2018)

கடைசி தொடர்பு:13:20 (03/01/2018)

இந்த 12 பேர்தான் இனி பேசுவார்கள்! நிர்வாகிகளுக்குக் கடிவாளம் போட்ட ஓ.பி.எஸ், இ.பி.எஸ்.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


இதுதொடர்பாக, அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அ.தி.மு.க-வின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளையும் நிலைப்பாடுகளையும், நாளிதல், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்குக் கொண்டுசெல்லும் வகையில், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தப் பட்டியலில், ’பொன்னையன், பா. வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிச்சாமி, ஏ.எஸ். மகேஸ்வரி மற்றும் பாபு முருகவேல்’ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும், மேற்கூறிய 12 பேர் தவிர, அ.தி.மு.க. சார்பில் ஊடகங்களில் பேச வேறு யாருக்கும் கட்சியின் அனுமதி இல்லை என்றும், தோழமைக் கட்சிகளில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் ஒய்.ஜவஹர் அலி மட்டுமே ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு பேசுவார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க-வுக்காக, புதிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் தொடங்கப்படும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.